ஸ்ரீ வனதுர்க்கை அம்மன் திருக்கோவில்
வாழ்வளிக்கும் வனதுர்க்கை அம்மன்
உள்ளத்தில் ஊக்கத்தையும், வாழ்வில் வளத்தையும் தரும் வனதுர்க்கை அம்மன் சிவகங்கை அருகே சக்திநகரில் அமைந்துள்ள அருள்மிகு வனதுர்க்கை அம்மன் திருக்கோவிலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
பொதுவாக துர்க்கை வடக்கு அல்லது மேற்கு நோக்கி அருள்பாலிப்பது வழக்கம். இங்குள்ள வனதுர்க்கை வடக்கு நோக்கி தனிக்கோயிலில் அருள்பாலிக்கிறாள். அம்மன் திருமணத்தடை களைபவள். தீர்க்க சுமங்கலியாக வாழ அருள்பவள். செல்வவளம் தருவாள்.கோயிலுக்கு கிழக்கே யாகசாலையும், அன்னதானக்கூடமும் அமைந்துள்ளது. அம்மனுக்கு எதிரில் அம்மனின் சிம்ம வாகனம் அமர்ந்த நிலையில் உள்ளது. நுழைவுவாசலின் இருபுறமும் துவாரபாலகிகள் உள்ளனர். நவதுர்க்கையில் இவள் வன துர்க்கை. தமிழ்நாட்டில் வனதுர்க்கைக்கென சில இடங்களில் மட்டுமே தனிக்கோயில் அமைந்துள்ளது. இங்கு அம்மன் 9 அடி உயரத்தில் கம்பீரமாய் காட்சியளிப்பது இந்தக்கோவிலின் தனிச்சிறப்பு.
அனைத்துக் கிழமைகளிலும் வரக்கூடிய ராகுகாலத்தின் போது இவளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்படுகிறது.