கோவில் மண்டபத்தில் வடக்கு பார்த்து அருள்மிகு வன துர்க்கை அம்மன் வீற்றிருக்கிறாள்.
கிழக்கு நோக்கி மையத்தில் மூலவர் விநாயகப்பெருமான் ஆலயம் அமைந்துள்ளது.
விநாயகப்பெருமானின் வலப்புறம் அருள்மிகு சரஸ்வதி தேவியும் இடப்புறம் தாய் மூகாம்பிகையும் தனித்தனியே அமைக்கப்பெற்ற கோவிலில் வீற்றிருக்கின்றனர்.
கோவில் மண்டபத்திற்கு வெளியே நவகிரஹங்கள் மேலே சூரியபகவானின் எழுபரித்தேர்க்குடையின் கீழே அமைந்துள்ளது.
கோவில் வளாகத்தில் வளத்தையும் செல்வச் செழிப்பையும் தரும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் நேர்த்தியாக அமைக்கப்பட்ட கல் மண்டபத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.