
பால்குட விழா ஆண்டுதோறும் ஆடி மாதம் பால்குட விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விரதமிருந்து பக்தர்கள் அனைவரும் பெரும் திரளாக கூடி தங்கள் வேண்டுதல் நிறைவேற பால்குடம் சுமந்து வந்து அம்மனை வேண்டி தரிசிப்பர்.
ஸ்ரீ வன துர்க்கை அம்மன்
வாரம்தோறும் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளி அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
குருப்பெயர்ச்சி மற்றும் சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி மற்றும் சனிப்பெயர்ச்சி போன்ற நிகழ்வுகளில் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
இதர சிறப்பு தினங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சரஸ்வதி பூஜையன்று கற்பகா மெட்ரிகுலேஷன் பள்ளி - புதிய மாணவர்களுக்கு சரஸ்வதி தேவிமுன் வழிபட்டு நெல்மணிகளில் மொழியின் முதல் எழுத்தான "அ" எழுதி பள்ளிப்படிப்பை துவங்கும் சிறப்பு நிகழ்வும் நடைபெறுகிறது.